ஆந்திராவில் பரவும் மர்ம நோயால் பொதுமக்கள் அச்சம் – 200 பேர் பாதிப்பு, ஒருவர் கவலைக்கிடம்!!

0

கொரோனா நோய் பரவல் குறைந்து கொண்டும் இருக்கும் நிலையில் ஆந்திராவில் புதிதாக மர்மநோய் ஒன்று பரவுகிறது. இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட மக்கள் மயக்கமுற்று கீழே விழுந்தனர். 4ம் தேதி 3 பேரும், 5ம் தேதி 10 பேரும், நேற்று பலரும் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுவதால் மருத்துவர்களும், அதிகாரிகளும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மர்ம நோய்

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரில் கடந்த 4ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் 3 பேரும், 5ம் தேதி 10 பேரும், நேற்று பலரரும் மயங்கி கீழே விழுந்தனர். ஏலூர் தட்சிணை வீதி, கிழக்கு வீதி, அசோக் நகர், அருந்ததிபேட்டை போன்ற இடங்களில் 18 குழந்தைகள் உட்பட 200 பேர் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் அனைவரும் ஏலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால், ஒரு சிலர் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக மக்கள் திடீர் திடீரென மயங்கி விழும் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று அம்மாநில முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆளநானி நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை!!

அவர்கள் கூறியதாவது, “மருத்துவர்கள் சிடி ஸ்கேன், ரத்த மாதிரிகள், கொரோனா மாதிரிகள் எடுத்து சோதனை செய்து வருகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, அனைத்து ரிப்போர்ட்களும் நார்மலாகத்தான் உள்ளது, கொரோனாவும் இல்லை, நோயாளிகள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றனர். நோயாளிகளுக்கு 10 முதல் 15 நிமிடம் மட்டுமே வாந்தி மயக்கம், தலை சுற்றல் போன்றவை இருந்ததாகவும், மயக்கமுற்றவள்கள் அனைவரும் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள்.

இதில் முதியவர்களும், குழந்தைகளும் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 6 வயது சிறுமி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் விஜயவாடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனால், இப்பகுதியில் மருத்துவ ஊழியர்கள் வீடு வீடாக சென்று மக்களின் உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர்.

பல நோயாளிகள் தங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் மன உளைச்சலால் அவதிப்படுகின்றனர். இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குடிநீரில் கலப்படம் உள்ளதா? அல்லது மர்ம நபர்களின் சதிச் செயலா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here