Friday, April 26, 2024

FASTag மூலமாக பார்க்கிங் கட்டணம் – நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க புதிய வழி..!!

Must Read

தேசிய இந்திய கொடுப்பனவு நிறுவனம் (NPCI – National Payments Corporation of India) FASTagகள் மூலம் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய பெருநகரங்களில் உள்ள மால்கள், விமானநிலையங்கள் மற்றும் மற்ற தனியார் பார்க்கிங் இடங்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் துரித முறையை அறிமுக படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை:

கொரோன நோய் தொற்றின் தீவிர பரவும் தன்மையை நினைவில் கொண்டு, தொடுதல் இன்றி கட்டணம் செலுத்தும் இம்முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது, பல நாடுகளில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை டிஜிட்டல் முறையில் இருப்பினும், சில இடங்களில் பாதி- கணினிமயமாக்கபட்டு இருப்பினும் 100% சமூக இடைவேளை மற்றும் தொடுதலின்றி கட்டணம் செலுத்துவதில்லை.

புதிய FASTag முறை:

FASTagஎன்பது சுங்கவரி சாவடிகளில் கட்டணம் செலுத்த வண்டியின் திரைகளில் ஒட்டப்பட்டிருக்கும் இணைப்பு கருவி, இது சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகளை காத்திருக்க வைப்பதில்லை.

FASTag
FASTag

ரேடியோ அதிர்வலை அடையாள தொழில்நுட்பம் (Radio Frequency Identification Technology – RIFD) மூலம் இந்த கருவி நேரடியாக இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்தோ அல்லது முன்பணம் செலுத்திய கணக்கில் இருந்தோ எடுத்துக்கொள்ளும். ஹைட்ரபாத் GMR பன்னாட்டு விமானநிலையத்தில் ஏற்கனவே இந்த தொழில் நுட்ப முறை உள்ளது.

FASTag
FASTag

NCPI ஏற்கனவே சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள முக்கிய மால்கள், விமான நிலையங்கள் மற்றும் மற்ற தனியார் வணிக வளாகங்களிடம் தொடுதல்இல்லாத NETC எனப்படும் தேசிய மின்னணு சுங்கவரி கட்டண வசூலிப்பு முறையை பார்க்கிங் கட்டணத்திற்கு பயன்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் பல முக்கிய வங்கிகளில் இருந்து ஆதரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செலுத்தும் முறை:

இந்த NETC- FASTag முறை பார்க்கிங் கட்டணம் முன்பணம் செலுத்தியோ பின்பு பணம் செலுத்தவோ சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது. FASTag கருவி வாங்கும் போது செலுத்தப்படும் முதல் கட்டணம் தவிர வேற எந்த கட்டணமும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கபட போவதில்லை. இவ்வாறு வங்கி கருவி சுங்கசாவடி FASTag வழிகளிலும் பொருந்தும்.

FASTag method
FASTag method

 

இந்த தனித்துவமான தொடுதல் இன்றி கட்டணம் செலுத்தும் முறை பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வசதிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோன நோய் தொற்று காலத்தில் இது மிகவும் முக்கிய தேவையாக உள்ளது என NCCI யின் COO பிரவீனா ராய் கூறியுள்ளார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC 'குரூப் 1' தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத்துறைகளில் 90 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -