தனியார் பள்ளிகள் எவ்வித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது – இயக்குனரகம் உத்தரவு!!

0
school-fees
school-fees

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை எந்த விதமான கட்டணங்களையும் பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தனியார் பள்ளிகள் கட்டணம்:

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களை கட்டாயப்படுத்தி கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. அவ்வாறு கட்டணம் செலுத்தாவிட்டால் அம்மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து விலக்குவதாக அடுக்கடுக்காக எழுந்த புகாரால் பெரும் அதிர்ச்சி கிளம்பியது. இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக தனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை ஆன்லைன் பதிவு தொடக்கம் – இறுதியாண்டு தேர்வுகள் எப்போது?

school fees
school fees

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து நாளை அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட உள்ளது. எனவே அதுவரை தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் எவ்வித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here