இன்போசிஸ் நிறுவனத்தின் 2020 ஜூன் காலாண்டு மதிப்பு – ரூ.4,233 கோடி வருவாய்..!

0

ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நேற்று தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது.

இன்போசிஸ் நிறுவனம்..!

இன்போசிஸ் நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் லாபமாக ரூ.4,233 கோடி ஈட்டியுள்ளது. அதே காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.23,665 கோடியாக உள்ளது. இது முந்தைய காலாண்டை காட்டிலும் 1.7 சதவீதம் அதிகமாகும். சி.என்.பி.-டி.வி.18 ரூ.3,950 கோடி அளவுக்கே இன்போசிஸ் லாபம் ஈட்டும் என மதிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FASTag மூலமாக பார்க்கிங் கட்டணம் – நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க புதிய வழி..!!

இன்போசிஸின் ஜூன் காலாண்டு முடிவுகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனருமான சலீல் பரேக் கூறியதாவது, எங்களது முதல் காலாண்டு ஏப்ரல் – ஜூன் முடிவுகள் குறிப்பாக வளர்ச்சி எங்கள் சேவை வழங்கல்களின் பொருத்தப்பாட்டிற்கும் வாடிக்கையாளர்களின் வணிக முன்னுரிமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கும் ஒரு தெளிவான சான்றாகும். இது இந்த காலங்களில் அவர்களுடன் எதிரொலிக்கிறது. இந்த காலகட்டத்தில் எங்கள் ஊழியர்கள் மற்றும் தலைமையின் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பையும் இது நிரூபிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here