பிரபல பாலிவுட் பாடகர் வாஜித் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

0

பாலிவுட்டில் பிரபலங்கள் சிலர் கடந்த சில நாட்களாக உயிரிழந்து வருகிறார்கள் இச்சம்பவம் மொத்த பாலிவுட்டையும் சற்று சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் பின் அதற்கு அடுத்த நாளே பழம்பெரும் நடிகரும் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷி கபூர் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சோகமே இன்னும் மறையாக இருக்கும் தருணத்தில் அதற்குள் பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான வாஜித் கான் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

சாஜித்- வாஜித் சகோதரர்கள்

பிரபல தபேலா கலைஞரான உஸ்தாத் ஷராஃபத் அலிகானின் மகன்களான சாஜித்- வாஜித் இவர்கள் 1998ஆம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ என்னும் படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளர்களாக அறிமுகம் ஆனார்கள் அதன்பின் சல்மான்கானின் ஆஸ்தான இசையமைப்பாளர்களாக ஆனார் சோரி சோரி, ஹலோ பிரதர்ஸ் ‘வாண்டட்’, ‘தபாங்’, ‘ஏக் தா டைகர்’, ‘தேவி’ படங்களுக்கு இசையமைத்த பிரபலமான இசை இரட்டையர்கள் சஜீத்-வஜீத் ஆகியோரில் ஒருவரான,

இசையமைப்பாளர் வஜீத் கான் வாஜித் கான 42 வயது இளைஞர் ஆவார் இவர் கொரோனா பாதிப்பால் இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார். சமீபத்தில் வெளியான ‘ப்யார் கரோனா’ ‘பாய் பாய்’ ஆகிய சல்மான்கானின் இரு ஆல்பங்களுக்கு இசையமைத்திருந்தனர் இவர்கள்.இந்நிலையில் சாஜித்- வாஜித் சகோதரர்களில் ஒருவரான வாஜித் கான் இன்று (ஜூன் 1) உடல்நலக் குறைவால் காலமானார் என இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுத்தி படுத்தி உள்ளார்.

வாஜித் மரணம்

வாஜித் கானுக்கு  சில நாட்களுக்கு முன்பு மும்பை சேம்பூர் பகுதியில் உள்ள சுரானா மருத்துவமனையில் வஜித் கான் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் நிலைமை மோசமானது. அவர் உடலில் பல பிரச்சனைகள் இருந்தன. சிறுநீரக பிரச்சினை இருந்த்தா  மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார்,அண்மையில் தான் அவருக்கு சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது.

மருத்துவமனையில் இருந்த அவரின் நிலைமை மோசமானது. இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக வஜித் கானுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது.சிறுநீரகத் தொற்று தான் ஆரம்பம். அதன் பிறகு அவரின் நிலை கவலைக்கிடமானது பின் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.இவருடைய மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here