பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் வாட்ச் – ஆப்பிளுக்கு ஆப்பு!!

0

பிரபல சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் தற்போது புதிதாக ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்:

சமூக வலைதள செயலிகளில் மிக முக்கியமாக ஒன்றாக செயல்படுவது தான் பேஸ்புக். இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த செயலி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. அதன்படி பேஸ்புக் புதிதாக ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அடுத்த ஆண்டு முதல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய சில தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்வாட்ச் செல்லுலார் தன்மையை கொண்டிருக்கும். எனவே இந்த வாட்ச் ஸ்மார்ட்போன் உதவி இல்லாமல் தனியாகவே இயங்கும். மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் நாம் பேஸ்புக் மற்றும் மெஸ்சேன்ஜர் ஆகிய செயலியையும் பயன்படுத்தலாம்.

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் – வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

அதற்கு ஏற்றவாறு இந்த வாட்ச் அமைந்திருக்குமாம். தற்போது முதற்கட்டமாக இந்த வாட்சில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பெற்றிருக்கும். ஆனால் இந்த வாட்சிற்காக பேஸ்புக் தனக்கு சொந்தமாக புதிதாக ஒரு ஓஎஸ் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இந்த வாட்ச் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சிற்கு கடும் போட்டியாக அமையும் என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த வாட்சின் விலை மதிப்பு சுமார் 200 டாலர் என்றும், விரைவில் இதுபற்றிய முழு விவரங்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here