மாஸ்க் & சமூக இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணங்களை தடுக்கும் – ஆய்வில் தகவல்!!

0
Corona death
Corona death

இந்தியாவில் முகக்கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டால் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் 2,00,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொடர்பான இறப்புகளைத் தடுக்க உதவக்கூடும் என்று ஒரு வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் இதுவரை 3,769,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 66,460 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், 2,901,908 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் COVID-19 இன் எண்ணிக்கையை மேலும் கட்டுப்படுத்த ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் பிற COVID-19 தடுப்பு வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை இது கூறுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் என்று ஐஎச்எம்இ இயக்குனர் கிறிஸ்டோபர் முர்ரே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முற்றிலும் நிறுத்தம் – மத்திய அரசு நடவடிக்கை!!

மறுபுறம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு, மாஸ்க் அணிவது மற்றும் பிற விதிகள் தற்போதைய மட்டத்தில் இருந்தால், டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் இந்தியா மொத்தம் 492,380 இறப்புகளை சந்திக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த சூழ்நிலையில், 13 மாநிலங்கள் ஒவ்வொன்றும் 10,000 க்கும் மேற்பட்ட COVID-19 இறப்புகளைக் கொண்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்”. தற்போது வரை மஹாராஷ்டிராவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here