இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் – முதல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்!!

0

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

ஒருநாள் தொடர்:

கொரோனா பாதிப்புக்கு இடையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் டி20 போட்டிகள் முடிவடைந்து உள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பயிற்சியின் போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியா அணி விபரம்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்து அணி விபரம்:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட்

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் பிஞ்ச், வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here