ENG vs PAK: புதிய ரெக்கார்ட் படைத்த தொடக்க வீரர்கள்…, ஒரே தொடரில் குவியும் சாதனை!!

0
ENG vs PAK: புதிய ரெக்கார்ட் படைத்த தொடக்க வீரர்கள்..., ஒரே தொடரில் குவியும் சாதனை!!
ENG vs PAK: புதிய ரெக்கார்ட் படைத்த தொடக்க வீரர்கள்..., ஒரே தொடரில் குவியும் சாதனை!!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்கள் சாதனைகளை குவித்து வருகின்றனர்.

ENG vs PAK:

டி20 உலக கோப்பையை தட்டிச் சென்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின், முதல் டெஸ்ட் போட்டியானது, கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து களமிறங்கிய, இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே, 4 விக்கெட்டுகளை இழந்து, 506 ரன்கள் குவித்திருந்தது. இதனால், டெஸ்ட் வடிவில் அதிவேகமாக 500 ரன்கள் கடந்த அணிகள் பட்டியலில் இணைத்தது. இதில், சாக் கிராலி 122, பென் டக்கெட் 107, ஒல்லி போப் 108 என சதம் விளாசி இருந்தனர். 2வது நாளில் ஹாரி புரூக் (153) அடிக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்களை குவித்திருந்தது.

IND VS BAN : விமானத்தில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட சோகம்…, மன்னிப்பு கேட்ட நிறுவனம்!! என்ன நடந்தது தெரியுமா??

இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள், அப்துல்லா ஷபீக் 114, இமாம்-உல்-ஹக் 121 என சதம் அடித்து விளாசினர். இதனால், டெஸ்ட் வரலாற்றில், இரு அணிகளின் தொடக்க ஜோடியும் தங்களது முதல் இன்னிங்சில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். மேலும், கடந்த சில மாதம் பார்மின்றி இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் இந்த தொடரில் சதம் அடித்துள்ளார். இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here