6 லட்சம் கோடி ரூபாயை அள்ளிய எலன் மஸ்க் – உலக பணக்காரர்களில் 2வது இடம்!!

0
Elon Musk
Elon Musk

டெஸ்லா நிறுவனத்தின் கட்டுமான தலைவரும் முதன்மை செயல் அதிகாரியுமான எலன் மஸ்க் தனது சொத்தில் மேலும் 9 பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.6 லட்சம் கோடிக்கு மேல்) சேர்த்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் பிறந்த அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டும் தொழில் முதலீட்டாளரும் ஆவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் தற்போது SPACE X நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். மேலும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். இவர் உலக பணக்காரர்களில் 2 வது இடத்தில் இருப்பவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 167.3 பில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும். 49 வயதான இவர் தற்போது மேலும் 9 பில்லியன் அமெரிக்க டாலரை சேர்த்துள்ளார்.

9 பில்லியன் அமெரிக்கா டாலர்:

சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட உயர்வு காரணத்தினால் இவர் தற்போது 9 பில்லியன் அமெரிக்க டாலரை அள்ளியதற்கு காரணம். அதுமட்டுமல்லாமல் எலக்ட்ரிக் நிறுவனங்களில் முதலீடு செய்வதனால் தான் இவர் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என்ற காரணங்களும் சிலர் கூறி வருகின்றனர்.

கமல் கைக்கு மாறும் ‘டார்ச் லைட்’ சின்னம்??

தற்போது 187 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் நீடித்து வருகிறார். அதன் பின் டெஸ்லா நிறுவனத்தின் கட்டுமான தலைவர் எலான் மஸ்க் இரண்டாவது இடத்தில உள்ளார். அடுத்தபடியாக பில் கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மார்க் சூக்கர்பேர்க் அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here