தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த கனமழை – 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்!!

0

தமிழகத்தில் டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தெற்கு உள்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள்மாவட்டங்களில் லேசான மழையும், வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.

வத்திக்குச்சியில் இருந்து காட்டுப்பூச்சியாக மாறிய வனிதா!!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில்13 செமீ, கடலூரில் 7 செமீ, ராமேஸ்வரம், கிராண்ட் அணைக்கட்டு, நன்னிலம், கொள்ளிடம், புள்ளம்பட்டி, மண்டபம், சீர்காழி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச இருப்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் யாரும் அடுத்த 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1.10.2020 முதல் 19.12.2020 வரை தமிழகத்தில் பெய்த மழை அளவையும் வெளியிட்டு உள்ளனர். அதன்படி சென்னை, காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் அதிகபட்ச மழையும், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் குறைந்தபட்ச மழையும் பதிவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here