தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு., முதல்வரை சாடும் எடப்பாடி பழனிச்சாமி!!

0
தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு., முதல்வரை சாடும் எடப்பாடி பழனிச்சாமி!!
தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு., முதல்வரை சாடும் எடப்பாடி பழனிச்சாமி!!

தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையும் மீறி சில இடங்களில் அவ்வப்போது போதைப்பொருள் விற்பனையால் எண்ணற்ற உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மரக்காணத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த கள்ளச்சாராயத்தை 30க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும் 39 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கும் விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்.., மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

இந்த உயிரிழப்புகளுக்கு தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம். கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது. இதற்கு காரணமான முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here