அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பில் சலுகை…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பில் சலுகை..., வெளியான முக்கிய அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பில் சலுகை..., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் பலர் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேண்டி, அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பணி சார்ந்த சிறப்பு மற்றும் துணைத் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இந்த தேர்வினை எழுதுவோருக்கும் சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது, வயது வரம்பு 53க்குள் தான் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தப்பட்சம் 5 முறை இந்த தேர்வுகளை எழுதியோருக்கு தேர்ச்சி பெறுவதில் சில சலுகைகளும் உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கு சான்றாக, 5 முறை தேர்வு எழுதியதற்கான விண்ணப்பதாரின் ஹால் டிக்கெட் மற்றும் தேர்ச்சி பெற்றாரா?? இல்லையா?? என்பதற்கான ரிசல்ட் காபி உள்ளிட்டவைகளை துறை சார்ந்து அளிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் பணி மன நிறைவு இருந்தால் மட்டுமே பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு குறித்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என முன்பு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு., முதல்வரை சாடும் எடப்பாடி பழனிச்சாமி!!

இந்த அறிவிப்பானது, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது வெளியானது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதால், சிறப்பு மற்றும் துணைத் தேர்வு எழுவதுவர்களுக்கான வயது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறப்பு மற்றும் துணைத் தேர்வு எழுவதுவருக்கு வயது 53 என்பதே 55 ஆக உயர்த்தி அரசாணை வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here