மழை காலத்தில் “இதையெல்லாம்” சாப்பிட கூடாது.,, மீறினால் பாதிப்பு உங்களுக்குத்தான்!!

0
மழை காலத்தில்
மழை காலத்தில் "இதையெல்லாம்" சாப்பிட கூடாது.,, மீறினால் பாதிப்பு உங்களுக்குத்தான்!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நாள்தோறும் விடாமல் பெய்து வருகிறது. இந்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் சாப்பிடும் உணவுகளில் அதிக கட்டுப்பாடு தேவை, ஏனென்றால் மழை காலத்தில் தான் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா என அதிகமான நோய்கள் நம்மை பாதிக்கும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. இந்நிலையில் என்னென்ன உணவுகளை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • தெருக்களில் விற்கப்படும் fast food களை தவிர்க்க வேண்டும். இந்த மழைக்காலத்தில் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதே நல்லது.
  • மழை நேரங்களில் தண்ணீர் வழியாக பரவக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அதிகமாக இருக்கும். அதனால் கடல் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

  • எந்த உணவு சாப்பிட்டாலும் கொஞ்சம் சூடாக சாப்பிட வேண்டும், ஆறிய உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
  • பச்சை இலை காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட கூடாது. அவற்றை உப்பு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுவது நல்லது.
  • அதிக மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இந்த மழை நேரத்தில் செரிமானத்தின் வேகம் குறைவாக இருக்கும். அதனால் இந்த உணவுகளை சாப்பிடும் போது செரிமான பிரச்சனை உண்டாக வாய்ப்பு உள்ளது.
  • பழங்களை கட் செய்து பிரிட்ஜில் வைத்தோ அல்லது வெளியில் ரொம்ப நேரம் வைத்தோ சாப்பிட கூடாது.
  • செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here