கேங்ஸ்டராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்….,’கிங் ஆஃப் கோதா’ கேரக்டர்ஸ் ரிவீல்….,

0
கேங்ஸ்டராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்....,'கிங் ஆஃப் கோதா' கேரக்டர்ஸ் ரிவீல்....,
கேங்ஸ்டராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்....,'கிங் ஆஃப் கோதா' கேரக்டர்ஸ் ரிவீல்....,

அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. முதல் முறையாக நடிகர் துல்கர் சல்மான் கேங்ஸ்டர் ஆக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். முன்னதாக, ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. இந்த படத்திற்கான டீசரை வரும் ஜூலை 29 ஆம் தேதி பக்ரீத் 2023 அன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு…,ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி…,

தொடர்ந்து இந்த படம் 24 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here