நாய்க்கு பிரபாகரன் பெயர் – துல்கர் சல்மானின் மலையாள படத்தால் வெடித்த சர்ச்சை..!

0

வெளியான இரண்டு மாதங்கள் கழித்து தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது துல்கர் சல்மானின் ‘வரனே ஆவிஷ்யமுண்டு’ என்கிற திரைப்படம். இந்த படத்தில் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது தான் இதற்கு காரணம். இதற்காக இப்படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

‘வரனே ஆவிஷ்யமுண்டு’ திரைப்படம்:

நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் தான் ‘வரனே ஆவிஷ்யமுண்டு’. இதை அனூப் சத்யன் இயக்கி இருந்தார். இதில் சுரேஷ்கோபி, ஷோபனா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி மாதமே கேரளாவில் வெளியாகியது.

தற்போது இணையத்தில் வெளியாகி தான் இந்த பிரச்சனையில் சிக்கி உள்ளது. இந்தப்படத்தில் சுரேஷ்கோபி தான் வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டு அழைப்பார். அது தமிழக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர். இதனால் தமிழ் ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

துல்கர் சல்மான் மன்னிப்பு:

இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில், பழைய மலையாளப் படமான ‘பட்டண பிரவேஷம்’ படத்தில் வரும் நகைச்சுவை அது என்றும் யாரையும் குறிப்பிடும் நோக்கில் இது எடுக்கப்படவில்லை என தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்து தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார். இது தவறான புரிதலால் எடுக்கப்பட்டு விட்டது எனவும் இதைப் பற்றிய வெறுப்பைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரி உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here