வறண்ட உங்க முடி பளபளப்பாக மின்னணுமா? சட்டுன்னு இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க., அப்புறம் நீங்களே அசந்துடுவீங்க!!

0
வறண்ட உங்க முடி பளபளப்பாக மின்னணுமா? சட்டுன்னு இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க., அப்புறம் நீங்களே அசந்துடுவீங்க!!
வறண்ட உங்க முடி பளபளப்பாக மின்னணுமா? சட்டுன்னு இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க., அப்புறம் நீங்களே அசந்துடுவீங்க!!

பொதுவாக நம்மில் பலர் முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சில ஹேர் பேக்குகளை பயன்படுத்தி வருவோம். அப்படி இயற்கையான ஹேர் பேக்குகளை நம் தலைமுடியில் தடவி வந்தால் கூட, ஒரு கட்டத்தில் நம் கூந்தல் வறட்சியை சந்திக்கும். இதனால் முடி வெடிப்பு ஏற்பட்டு, ஹேர் லாஸ் ஏற்படக்கூடும். ஆனால் இந்த பிரச்சனையில் நம் தலைமுடியை பாதுகாத்து கொள்ள ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை தற்போது பார்ப்போம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • கடுகு எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – 3 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கருஞ்சீரகப்பொடி – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் ஆயில் தயாரிப்பதற்கு ஒரு சில்வர் பவுலில் கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஊற்றி கொள்ளவும். பிறகு இதோடு கருஞ்சீரக பொடியையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மேலும் தண்ணீர் கொதித்து வரும்போது அதன் நடுவில் நாம் கலக்கி வைத்துள்ள எண்ணெய் பவுலை வைத்து indirect முறையில் ஆயிலை சூடாக்கி கொள்ளவும். இப்படி ஒரு 10 நிமிடங்கள் மட்டும் அந்த எண்ணெய்களை சுட வைக்கவும்.

‘மாவீரன்’ பட ரசிகர்களுக்கு  சூப்பர்  நியூஸ்.., வசூல் வெற்றிக்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த படம்!!

பிறகு இந்த ஆயிலை காட்டன் பஞ்சில் தொட்டு தலை முடியின் வேர்க்கால்களில் படும் படி அப்ளை செய்து கொள்ளவும். அதன் பிறகு தலைமுடியை லைட்டாக மசாஜ் செய்து ஒரு 1 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். பிறகு ஷாம்பு யூஸ் செய்து முடியை வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஆயில் பாத்திங் முறையை மாதத்தில் ஒரு முறையாவது பாலோவ் செய்து வருவது நம் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here