மணக்க மணக்க முருங்கைக்காயில் சூப்பரான சட்னி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!

0
மணக்க மணக்க முருங்கைக்காயில் சூப்பரான சட்னி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!
மணக்க மணக்க முருங்கைக்காயில் சூப்பரான சட்னி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!

எக்கசக்க சத்துக்களை கொண்டு இருக்கும் முருங்கைக்காய், கீரை போன்றவற்றை நாம் அன்றாட உணவாக எடுத்து வருகிறோம். அப்படி சுவையை அள்ளித்தரும் முருங்கைக்காயை வைத்து இதுவரை சாம்பார் சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

  • முருங்கைக்காய் – 3
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பச்சை மிளகாய் – 3
  • எண்ணெய் – 5 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • வெள்ளைப்பூண்டு – 3

செய்முறை விளக்கம்;

இந்த முருங்கைக்காய் சட்னி தயாரிப்பதற்கு நாம் வாங்கி வைத்துள்ள முருங்கை காயை நறுக்கிக் கொள்ளவும். பிறகு இதை வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் முருங்கை காயின் நடு பகுதியில் இருக்கும் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு, கொத்தமல்லி இலைகள் சிறிதளவு போட்டு கொள்ளவும். மேலும் இதோடு முருங்கை காயின் சதை பகுதியை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த வழக்கு., நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

பின்னர் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை போட்டு, ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். அப்போது சட்னியில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வருவதை நம்மால் காண முடியும். அதன் பிறகு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். மேலும் இதை சுட சுட சாதம் அல்லது இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here