ரூ. 3,500 முதல் ரூ. 10 ஆயிரம் வரை – விமான பயணத்திற்கு டிக்கெட் விலை நிர்ணயம்..!

0

இந்தியாவில் மே 25ம் தேதி முதல் தொடங்க உள்ள உள்ளூர் விமான பயணங்களுக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 3,500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் வரை டிக்கெட் விலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான சேவை:

இந்தியாவில் உள்ளூர் விமான போக்குவரத்து தொடக்கம் குறித்து பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி, இந்தியாவில் மே 25ம் தேதி முதல் தொடங்கவுள்ள உள்ளூர் விமான போக்குவரத்தில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்படும். மேலும் விமானத்தில் பயணம் செய்பவர்கள், மாஸ்க், பாதுகாப்பு உடை மற்றும் சானிடைசர் வைத்திருப்பது அவசியம். மேலும் விமானத்தில் குடிநீர் மட்டுமே வழங்கப்படும் உணவு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானம் கிளம்புவதற்கு 2 மணிநேரம் முன்பு விமான நிலையத்திற்கு வந்திருக்க வேண்டும் எனவும், பயணத்தின் போது ஒரு பை மட்டுமே தங்களுடன் வைத்திருக்க பயணிகள் அனுமதிக்கப்படுவர். ஆரோக்ய சேது செயலில் ஸ்டேட்டஸ் சிவப்பு ஆக இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விமான கட்டணங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டில்லி மும்பை போன்ற நகரங்களில், பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்களாக இருக்கும் நிலையில், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.3,500ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.10 ஆயிரமும் இருக்கும். இது 3 மாதங்கள் அமலில் இருக்கும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here