தமிழகத்தில் மதுவிலக்கு மின்சாரம் மற்றும் ஆயத்த தீர்ப்பு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்காக அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஞ்சியோ மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாள் ஓய்வில் இருந்தார். பின் அவர் உடல் குணமடைந்ததை தொடர்ந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நேரத்தில் மருத்துவர்கள் செந்தில் பாலாஜி உடல் நிலை மோசம் அடைவதால் அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அவர்களது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.