கொரோனா தொற்று பார்வை இழப்பை ஏற்படுத்தும் – மருத்துவர் அதிர்ச்சி தகவல்!!

0
eye
eye

கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டறிய வல்லுநர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தற்போது கொரோனா ஏற்பட்ட 5 சதவீத பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா தொற்று:

கொரோனா பாதிப்பு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையடுத்து தற்போது கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்த போது கூறியதாவது, “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வரும்போது 5 சதவீதம் பேருக்கு காய்ச்சலுடன் கண் சிவப்பாக இருத்தல், கண்வலி, கண் உறுத்தல், நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கண்களுக்கு செல்லும் ரத்த குழாய் வீக்கம், ரத்த குழாய் அடைப்பு, ரத்த கசிவு போன்றவை ஏற்படுகிறது.

pink_eye
pink_eye

மேலும் இதனால் திடீர் பார்வை இழப்பு கூட ஏற்படுகிறது. இந்த பாதிப்பு 35 – 40 வயதினருக்கு ஏற்படுகிறது. இதனால் கண் சம்மந்தமான அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்தபின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.  மேலும் கொரோனாவால் கண்தானம் தடைசெய்யப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களின் கண்களை மட்டுமே தனமாக பெற முடியும் எனவும் மருத்துவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here