தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வெளியாவதில் சிக்கல்!!

0

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. தற்போது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

டாக்டர்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது. அந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவரப்பட்டது. மேலும் இந்த படம் வருகிற மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடெக்சன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தற்போது இந்த படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

‘கதிர், முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வந்தாச்சு’ – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இதனால் தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் எதிரொலியாக டாக்டர் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே இந்த படம் 26ம் தேதி வெளிவராது என்றும் விரைவில் வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here