அடுத்த அவார்டுக்கு தேர்வான விஜய் சேதுபதியின் முக்கிய படம்.., ரசிகர்கள் வாழ்த்து!!

0
அடுத்த அவார்டுக்கு தேர்வான விஜய் சேதுபதியின் முக்கிய படம்.., ரசிகர்கள் வாழ்த்து!!
அடுத்த அவார்டுக்கு தேர்வான விஜய் சேதுபதியின் முக்கிய படம்.., ரசிகர்கள் வாழ்த்து!!

இயக்குனர் சீனு ராமசாமி படைப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் அடுத்த ஒரு சாதனையை படைத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மாமனிதன்:

தமிழ் சினிமாவில் எந்தவித பாகுபாடுமின்றி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று தத்துரூபமாக நடிப்பவர்களில் கமலுக்கு பிறகு இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்து வந்த விஜய் சேதுபதிக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்த திரைப்படம் என்றால் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் தான். அப்படத்திற்கு பிறகு தான் அவருடைய மார்க்கெட் உயரத் தொடங்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி – சீனு ராமசாமி காம்போவில் வெளியான தர்மதுரை திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, வசூலை வாரி குவித்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமனிதன் திரைப்படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக மண்ணை கவ்வியது. இருப்பினும் இந்த திரைப்படம் பல விருதுகளை வாரி குவித்தது.

தன்னை போல் இருக்கும் நபரை கண்டு பிடித்து கொலை செய்த மாடல் அழகி.., ஜெர்மனியில் நடந்த கொடூர சம்பவம்!!

இந்த நிலையில் இந்த திரைப்படம் மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யாவின் மாஸ்கோ திரைப்பட விழாவில் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் திரையிட தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சீனு ராமசாமி மற்றும் யுவன் சங்கர் ராஜா ரஷ்யாவிற்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here