360 பேட்டிங்-ல மட்டும் இல்ல., பீல்டிங்கிலும் அசத்திய சூர்யகுமார்.., முக்காடு போட்ட நியூசிலாந்து வீரர்கள்!!!

0
360 பேட்டிங்-ல மட்டும் இல்ல., பீல்டிங்கிலும் அசத்திய சூர்யகுமார்.., முக்காடு போட்ட நியூசிலாந்து வீரர்கள்!!!
360 பேட்டிங்-ல மட்டும் இல்ல., பீல்டிங்கிலும் அசத்திய சூர்யகுமார்.., முக்காடு போட்ட நியூசிலாந்து வீரர்கள்!!!

இந்தியா, நியூசிலாந்து அணிகளின் T20 தொடரின் நேற்று நடந்த 3 வது போட்டியில் 168 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என T20 தொடரையும் கைப்பற்றியது. மேலும் நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் சுப்மன் கில் (126*) மற்றும் ராகுல் திரிபாதியின் (44) அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 234-4 என்ற இமாலய ரன் குவித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பிரேஸ்வெல் டைவ் அடித்து கேட்ச் செய்ததால் சூரியகுமார் (24) அதிரடியை காண முடியாமல் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு பீல்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் சூரியகுமார். அதாவது நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஆலன் கட் ஷாட் அடிக்க பந்து அதிவேகமாக சூரியகுமார் தலைக்கு மேல் செல்ல டைமிங்கில் லாபகமாக பிடித்து விட்டார். பின்னர் க்ளென் பிலிப்ஸ் பவுண்டரிக்கு தூக்கி அடித்த பந்தை டைவ் கேட்ச் பிடித்து அசத்தினார்.

விராட் கோலி, சூர்யகுமார் வழியில் சுப்மன் கில்…, டெத் ஓவரில் எதிரணியை திணற வைத்து அதிரடி!!

கடைசியாக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அடித்த செம்ம ஷாட்டை யாரும் எதிர்பாராத வகையில் பவுண்டரி லைனில் நேர்த்தியாக கேட்ச் செய்திருப்பார். இதனால் பேட்டிங்கில் ஏமாற்றப்பட்ட ரசிகர்கள் சூர்யகுமாரின் அசாதாரண பீல்டிங்கில் மெய்சிலிர்த்தனர். மேலும் இப்படி எல்லாம் கூட சாகசம் செய்வாரா? என நியூசிலாந்து வீரர்களையே யோசிக்க வைத்து விட்டார் சூர்யகுமார் யாதவ். இதனால் நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here