நடிகர் விஜய் பெத்தவங்கள மதிக்கலையா?? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஏ.சி!!

0
நடிகர் விஜய் பெத்தவங்கள மதிக்கலையா?? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஏ.சி!!
நடிகர் விஜய் பெத்தவங்கள மதிக்கலையா?? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஏ.சி!!

இயக்குனர் சந்திரசேகர் தனது மகனான நடிகர் விஜய்க்கும் இடையே உள்ள மனஸ்தாபத்தை அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் .

விஜய் – சந்திரசேகர்:

நடிப்பு துறையில் எண்ணற்ற வெற்றிப் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை முதல் இடத்தில் வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் விஜய்க்கும், அவரின் தந்தை சந்திரசேகருக்கும் இடையே சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது சந்திர சேகர் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் சந்திரசேகர் தனது மகன் விஜய்யுடன் இருக்கும் மனஸ்தாபத்தை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, என் மகன் பணத்திற்காக பெற்றோர்களை மதிக்காமலும், கண்டுக்காமலும் இருந்து வருகிறார் என பேச்சுக்கள் அடிபடுகிறது.

இனியாவை வேலை வாங்கிய ராதிகா., ராமமூர்த்தி அட்டூழியத்தால் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

இந்த விஷயத்தில் என் மகன் போல் உலகத்தில் யாரும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது என்று கூறினார். எங்களுக்குள் இருக்கிறது சின்ன கோபம் அவ்வளவு தான் என்றும் கூடிய விரைவில் என் மகன் என்னிடம் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here