இனியாவை வேலை வாங்கிய ராதிகா., ராமமூர்த்தி அட்டூழியத்தால் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

0
இனியாவை வேலை வாங்கிய ராதிகா., ராமமூர்த்தி அட்டூழியத்தால் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
இனியாவை வேலை வாங்கிய ராதிகா., ராமமூர்த்தி அட்டூழியத்தால் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா வீட்டை விட்டு கோபியுடன் சென்றதால் குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் உள்ளனர். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் இனியா வீட்டில் இல்லாததை நினைத்து பாக்கிய அழுகிறார். அப்போது எழில் அவருக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறார். இந்தப் பக்கம் காலையில் தூங்கி எழுந்து இனியா கோபியை தேட அவர் வாக்கிங் போயிருக்காரு நீ பெட்ஷீட் எல்லாம் மடிச்சு வச்சிரு என ராதிகா சொல்லுகிறார். பிறகு இனியாவுக்கு ராதிகா காபி போட்டு கொடுக்கிறார். அப்போது பார்த்து கோபி வர இனியாவுக்கு காபி பிடிக்காது என கூறுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்புறம் கோபியிடம் நான் வீட்டுக்கு போறேன் அம்மா பாவம் என இனியா சொல்ல கோபி இனியாவை இங்கேயே இருக்க சொல்லுகிறார்.மறுபுறம் ஈஸ்வரி இனியாவை கூட்டிட்டு வர சொல்லி எழிலிடம் சொல்லுகிறார். அதற்கு பாக்கியா வேணாம் அவளாதா போனா அவளாவே வரட்டும் என சொல்றார். இந்த நேரத்தில் ராமமூர்த்தி கையில் பேக்கை தூக்கிக்கொண்டு வெளியே வர நீங்க எங்க போறீங்க என ஈஸ்வரி கேட்கிறார். அதற்கு அவர் நான் ஏன் பேத்தியுடன் இருக்க போகிறேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். மேலும் இனியா போனதையே எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நீங்க வேற ஏன் இப்படி செய்கிறீர்கள் என ஜெனி கேட்க, இனியா செய்த தவறை நான் புரிய வைக்கிறேன் என சொல்கிறார்.

அய்யோ.., இப்படி க்யூட்டா போஸ் கொடுத்துருக்கீங்களே நித்யா மேனன்.., சொக்கி போன இளசுகள்!!

பிறகு பாக்கியா இதெல்லாம் வேண்டாம் மாமா என்று சொல்ல அதற்கு ராமமூர்த்தி ஒன்னுமில்லை என்று சொல்லி கிளம்புகிறார். பின் ராதிகா வீட்டிற்கு வரும் ராமமூர்த்தியை பார்த்து இனியா சந்தோசப்படுகிறார். ஆனால் கோபி இப்போ எதுக்கு இங்கே வந்தீங்க இனியாவ கூட்டிட்டு போக வந்தீங்களா அப்படியெல்லாம் என்னால அனுப்ப முடியாது என கோபி சொல்லுகிறார். அதுக்கு ராமமூர்த்தி நான்  கூட்டிட்டு போக வரல என் பேத்தியுடன் இருக்க வந்தேன் என சொல்லுகிறார். உடனே இனியா சந்தோஷப்பட்டு சூப்பர் தாத்தா எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு இப்போ நீங்களும் வந்துட்டீங்க ஜாலியா இருக்கும் என சொல்லுகிறார். இதை கேட்ட ராதிகா கோபியை முறைத்து விட்டு கோபத்துடன் உள்ளே செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here