சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சூசகமாக சொன்ன S.A.C.., சோசியல் மீடியாவில் ஏற்பட்ட பரபரப்பு!!

0
சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சூசகமாக சொன்ன S.A.C.., சோசியல் மீடியாவில் ஏற்பட்ட பரபரப்பு!!
சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சூசகமாக சொன்ன S.A.C.., சோசியல் மீடியாவில் ஏற்பட்ட பரபரப்பு!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் ஏகப்பட்ட ஹிட் படங்களை குவித்து முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் S.A.சந்திரசேகர். மேலும் இவர் நடிகர் விஜயின் அப்பா என்பது நாம் அறிந்த ஒன்றே. இவர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்ற திரைப்படம் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை அன்று இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சமுத்திரக்கனி, சரவணன், இனியா, சாக்ஷி அகர்வால் போன்றோர் முக்கிய இடத்தில் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் விழாவின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டார் S.A . சந்திரசேகர். அவரிடம் ட்ரைலரில் ஸ்டார் என்ற லோகோவிற்கு அருகில் விஜய் புகைப்படத்தை வைத்தது ஏன் என்றும், மேலும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் போய்க் கொண்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் இவ்வாறு போட்டு உள்ளீர்கள் என்றவாறு கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீசன் 2.., இவங்க தான் ஹீரோ, ஹீரோயினா?? இணையத்தில் லீக்கான புகைப்படம்!!!!

அதற்கு இவர் ”படத்தைப் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் தேவையில்லாத வேற எந்த விவகாரத்தையும் பற்றியும் இங்கு பேச வேண்டாம். மேலும் இது என்னுடைய படம் அதனால் என் மகன் விஜய் புகைப்படத்தை இதில் போட்டுள்ளேன்”. இதனால் இந்த விஷயத்தை வேறு எந்த பிரச்சனையோடும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள் என்றவாறு பேட்டியாளர்களுக்கு S.A சந்திரசேகர் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here