ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு…, முதலிடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!

0
ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு..., முதலிடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!
ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு..., முதலிடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!

கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் இந்திய வீரர்களின் இடத்தை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ஐசிசி தரவரிசை:

ஐசிசியானது, மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 47, 26* ரன்கள் எடுத்த போதிலும், 908 புள்ளிகளுடன் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பட்டியலில், விராட் கோலி 14வது இடத்தை தக்க வைத்துள்ளார். தற்போது, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 யில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் ஹர்திக் பாண்டியா, ஆல்ரவுண்டர் தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ளார். இதே போல, ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் (734), விராட் கோலி (727) மற்றும் ரோஹித் சர்மா (719) புள்ளிகளுடன் 6, 7 மற்றும் 9 வது இடத்தை பிடித்துள்ளனர்.

“ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்த ஒரு இந்திய வீரர் பிளேயிங் லெவனில் கட்டாயம் தேவை”…, சுனில் ஜோஷி ஓபன் டாக்!!

இந்த ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசையில், முகமது சிராஜ் 729 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டி உள்ளார். மேலும், டெஸ்ட்டுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், ரிஷப் பண்ட் (7வது), ரோஹித் சர்மா (10வது), விராட் கோலி (15 வது) இடத்திலும், பவுலர்களுக்கான வரிசையில் பும்ரா (3வது), அஸ்வின் (4 வது) இடத்திலும் உள்ளனர். இதில், ஆல் ரவுண்டர் வரிசையில் ஜடேஜா (1வது) மற்றும் அஸ்வின் (2வது) இடத்தையும் தக்கவைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here