என்ன நம்புனதுக்கு ரொம்ப நன்றி விஜய்னா..! மாஸ்டர் ஷூட்டிங்கை முடித்த லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி..!

0

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் அப்படத்திற்காக தன்னை நம்பிய நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.

நட்சத்திர பட்டாளம்..!

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் கதாநாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். கைதி படத்தின் வெற்றியுடன் இப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் மீதும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

124 நாள் இடைவிடாத ஷூட்டிங்..!

லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் 126 நாள் இடைவெளியே இல்லாமல் ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. மேலும் இதற்கு என்னை நம்பிய நடிகர் விஜய்க்கு எனது நன்றிகள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here