மீண்டும் சூடுபிடிக்கும் கௌதம் மேனனின் “துருவ நட்சத்திரம்” ஷூட்டிங்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
மீண்டும் சூடுபிடிக்கும் கௌதம் மேனனின்
மீண்டும் சூடுபிடிக்கும் கௌதம் மேனனின் "துருவ நட்சத்திரம்" ஷூட்டிங்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

துருவ நட்சத்திரம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் காதலை வேறு ஒரு கோணத்தில் காட்டியவர் தான் இயக்குனர் கெளதம் மேனன். அந்த வகையில் அவர் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளி வந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார். மேலும் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் லீடு ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வந்தது. மேலும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை மட்டும் படக்குழுவினர் எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் படக்குழுவினர் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here