“உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் அணி இதுதான்”…, மனம் திறந்த கிறிஸ் கெய்ல்!!

0
"உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் அணி இதுதான்"..., மனம் திறந்த கிறிஸ் கெய்ல்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட அணி குறித்து, கிறிஸ் கெய்ல் மனம் திறந்துள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதத்தில் முடிவடைந்ததையடுத்து, ஐபிஎல் 16வது சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து விட்டது. இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை நடைபெற்ற 15 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (5), சென்னை சூப்பர் கிங்ஸ் (4) என அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக திகழ்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்தாலும், அதிக முறை 2வது, 3 வது மற்றும் 4வது இடத்தை பிடித்து அதிக ரசிகர் வரவேற்பை பெற்ற அணியாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸின் சிக்ஸர் மெஷின் கிறிஸ் கெய்ல் இந்த RCB அணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை தனது சிறந்த பங்களிப்பினை அளித்திருந்தார்.

ஜனவரி 2023 ஐசிசியின் சிறந்த வீரர் யார்?? பரிந்துரையில் இந்தியாவின் சுப்மன் கில், முகமது சிராஜ்!!

கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்ற இவர், RCB அணிக்கு தான் உலகிலேயே மிகவும் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர் என்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், இவர் RCB அணிக்காக விளையாடிய போது, இவரது சிக்ஸர் ஷாட் ஒரு ரசிகரின் மூக்கை பதம் பார்த்திருந்தது. அந்த ரசிகர், இவரிடம் கூறியதையும் இவர் நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ட்ரெஸ்ஸில் ரத்தத்துடன் இருக்கும் அந்த ரசிகர், “ஏன் சோகமாக இருக்கிறாய்?? கவலைப்படாமல் சிக்ஸர்களை பறக்க விடு” என்று கூறியது நினைவில் உள்ளது என்று உணர்வு பூர்வமாக கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here