Friday, May 17, 2024

டிஜிட்டல் முறையிலான ஓட்டுநர் உரிமம் இனி செல்லும் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!!

Must Read

சாலைகளில் தணிக்கை என்ற பெயரில் நடக்கும் ஊழலை தடுக்க புதிய முறையாகவும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக இனி ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை சோதனையின் போது காட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி புதிய முறை:

வாகனங்களில் பயணம் செய்யும் போது போலீசாரால் சோதனை நடத்தப்படுவது வழக்கம். இது அந்த ஓட்டுனர்கள் விதிகளை சரியாய் பின்பற்றுகின்றனரா?? என்பதை சோதனை செய்ய பின்பற்றப்பட்டு வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

license checking
license checking

இந்த சோதனையின் போது பலரும் தங்கள் ஓட்டுநர் உரிம சான்றிதழ், வாகனத்தின் ஆர்சி எனப்படும் பதிவு எண் சான்றிதழ், காப்பீட்டு சான்று நகல், பெர்மிட் நகல் சான்று போன்றவற்றை மறந்து வைத்து விடுவர்.

உ.பி.யில் மேலும் ஒரு கொடூரம் – 22 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை!!

digital driving license
digital driving license

இதனால் பல சிரமங்களுக்கு உள்ளவர். அதேபோல் சாலைகளில் தணிக்கை என்ற பெயரில் பல ஊழல் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில்:

இனி வாகன ஓட்டிகள் தங்கள் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொண்டு உபயோகிக்கலாம் என்றும் இனி சோதனையின் போது அந்த சான்றிதழ்களின் நகல்களை காட்டினால் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகளின் அறிக்கையை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால்,

  • வாகன சோதனையின் போது, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆர்சி எனப்படும் பதிவு எண் சான்றிதழ், காப்பீட்டு சான்று நகல், பெர்மிட் நகல் இவை அனைத்தையும் வெறும் புகைப்படங்களாக மட்டும் காட்ட கூடாது.
  • அனைத்து சான்றிதழ்களையும் டிஜிலாக்கர் என்ற ஆப் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனை தான் சோதனையின் போது காட்ட வேண்டும்.
  • இனி போக்குவரத்து போலீசார் சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு உதவும் சாமானியர்களின் பெயர் மற்றும் முகவரி கேட்டு தொந்தரவு செய்ய கூடாது.

இவ்வாறாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறைகளால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -