அஜீரணத்தை சரி செய்யும் “தீபாவளி லேகியம்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

தீபாவளி பண்டிகை சிறப்பாக முடிந்துவிட்டது. தீபாவளி என்றாலே நாம் தன்னையே மறந்து அதிகமாக சாப்பிடுவது வழக்கம். இதனால், அஜீரண கோளாறு, மந்த தன்மை, வாந்தி முதலிய தொந்தரவுகள் வருகிறது. இதற்கு, வீட்டிலேயே ஒரு சுலபமான மருந்து தாயார் செய்து சாப்பிடலாம் வாங்க. இது, ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்ததாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மிளகு – ஒரு டீ ஸ்பூன்

சீரகம் – 2 டீ ஸ்பூன்

தனியா – 2 டீ ஸ்பூன்

திப்பிலி – 5

சுக்கு – 1 துண்டு

ஏலக்காய் – 2

நெய் – தேவையான அளவு

வெல்லம் அல்லது கருப்பட்டி

செய்முறை:

மிளகு, தனியா, சீரகம், திப்பிலி, சுக்கு மற்றும் ஏலக்காயை நன்கு உரலில் போட்டு இடித்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பொடித்து வைத்த பொருட்களை போட்டு ஊற வைக்க வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து உரலில் அல்லது மிக்சியில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரைத்த விழுதில் சக்கை ஏதேனும் இருந்தால் மேலும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது, மண்சட்டி அல்லது கடினமான பாத்திரத்தில் வடிகட்டிய கரைசலை ஊற்றி அடுப்பில் வைத்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். கெட்டியாக வந்தவுடன் நெய் மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும்.

தண்ணீர் அனைத்தும் வற்றி சுருண்டு லேகியம் போன்ற பதத்திற்கு வந்தவுடன் இறக்க வேண்டும். இதை, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து ஒரு வாரத்திற்கு கூட பயன்படுத்தலாம். பெரிய நெல்லிக்காய் அளவிற்கு சாப்பிட்டாலே போதும் உடனடியாக வயிற்றில் எந்த தொந்தரவு இருந்தாலும் உடனடியாக சரியாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here