பார்த்தாலே நாக்கில் எச்சி ஊறும் சீலா மீன் வறுவல்.., ட்ரை பண்ணி பாருங்க.., மிச்சமே இருக்காது!!

0
பார்த்தாலே நாக்கில் எச்சி ஊறும் சீலா மீன் வறுவல்.., ட்ரை பண்ணி பாருங்க.., மிச்சமே இருக்காது!!
பார்த்தாலே நாக்கில் எச்சி ஊறும் சீலா மீன் வறுவல்.., ட்ரை பண்ணி பாருங்க.., மிச்சமே இருக்காது!!

நம்மில் பலரும் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்றான கண் பார்வை குறைபாடு நோயை தீர்க்க மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைக்கும் உணவுகளில் ஒன்று தான் மீன். இந்த மீன் வகைகளில் ஒன்றான ஷீலா மீனை வைத்து வித்தியாசமான புது டிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சீலா மீன் – 1
  • மிளகாய் தூள் -5
  • இஞ்சி பூண்டு – 50 கிராம்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • முட்டை – 1
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • கான்பிளவர் மாவு – 50 கிராம்
  • வெள்ளை எள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்

ஷீலா மீன் ப்ரை செய்வதற்கு ஒரு பவுலில் கான்பிளவர் மாவு சேர்த்து அதோடு 1 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய் தூள் ,2 டீஸ்பூன் மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் எள் சேர்த்து கொள்ளவும். பிறகு அதில் ஒரு முட்டை சேர்த்து, நன்றாக பேஸ்ட் பதத்தரிக்கு மசாலாவை தயார் செய்து கொள்ளவும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சீலா மீனை ஒரு தட்டில் வைத்து, அதன் மீது தயார் செய்து வைத்துள்ள மசாலாவை தடவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். இதை வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறினால் மீன் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here