ஊரே மணக்கும் கொங்கு நாட்டு கோழி குழம்பு.., இந்த மாதிரி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை அள்ளும்!!!

0
ஊரே மணக்கும் கொங்கு நாட்டு கோழி குழம்பு.., இந்த மாதிரி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை அள்ளும்!!!
ஊரே மணக்கும் கொங்கு நாட்டு கோழி குழம்பு.., இந்த மாதிரி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை அள்ளும்!!!

கோழி குழம்பு சமைப்பதில் பெயர் போனது நம் தமிழ் நாடு. அதிலும் காரசாரமாக கோழி குழம்பு சமைப்பதில் எப்பொழுதும் முதலிடத்தில் இருந்து வருவது கொங்கு நாட்டு கோழி குழம்பு. இந்த கொங்கு நாட்டு முறைப்படி கோழி குழம்பை சுவையாக சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1/2 கிலோ
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • தக்காளி – 2 நறுக்கியது
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

கொங்கு நாட்டு சிக்கன் குழம்பு ரெசிபி செய்வதற்கு ஒரு பவுலில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து மிளகாய் தூள், தயிர், உப்பு , சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்பொழுது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். அதோடு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இதோடு தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசாலா வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். இப்பொழுது இதில் மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கி விட்டு 1/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி போட்டு மூடவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை குழம்பில் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான கொங்கு நாடு கோழி குழம்பு ரெடியாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here