“போகி அன்று பொருட்களை கொளுத்த வேண்டாம்” – ஆணையர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
"போகி அன்று பொருட்களை கொளுத்த வேண்டாம்" - ஆணையர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

உலகெங்கும் உள்ள தமிழர்களின் கொண்டாட்டங்களான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் விளையாட்டு, நிகழ்ச்சி போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த பண்டிகையன்று மனிதனின் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக் குடும்பங்களில் ஆனந்தத்தை பெருக்க “பழையன கழித்து புதியன புகவிடும்” என்ற “மனத்தீ” கருத்தை முன்னோர்கள் வலியுறுத்தினர். இந்த கருத்தை தவறாக புரிந்து கொண்ட மக்கள் இன்றளவும் வரலாற்று புத்தகங்களையும் தேவையற்ற பொருட்களையும் தீயில் இட்டு வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் இவர்களுக்கும் பொருந்தும்., புதிய தகுதிகளை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!!

இதனால் காற்று மாசுபாடு, சுவாச பிரச்சனை என வளிமண்டலத்துக்கும், உயிரினங்களுக்கும் கேடு விளைவித்து வருகின்றனர். மேலும் இதை எரிப்பதனால் வரும் புகையால் விமான நிலையங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் அருகே பொருட்களை எரிக்க வேண்டாம் என மீனம்பாக்கம் விமான ஆணையர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here