சுட சுட இட்லி தோசை.., தக்காளியில்லாமல் சட்னி இப்படி செஞ்சு அசத்துங்க., மிச்சமே இருக்காது!!

0
சுட சுட இட்லி தோசை.., தக்காளியில்லாமல் சட்னி இப்படி செஞ்சு அசத்துங்க., மிச்சமே இருக்காது!!
சுட சுட இட்லி தோசை.., தக்காளியில்லாமல் சட்னி இப்படி செஞ்சு அசத்துங்க., மிச்சமே இருக்காது!!

பொதுவாக நம் வீடுகளில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட தேங்காய் மற்றும் தக்காளி சட்னியை தான் சமைத்து வருகிறோம். ஆனால் சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரித்து இருப்பதால், மக்கள் இதை வாங்கி சமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தக்காளி இல்லாமல் 2 வகையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இஞ்சி சட்னி

தேவையான பொருட்கள்;

  • குழம்பு கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  • இஞ்சி – 50 கிராம்
  • வெங்காயம் – 10
  • வெள்ளைப் பூண்டு – 6
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • வரமிளகாய் – 6
  • புளி – சிறிதளவு
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இஞ்சி சட்னி தயாரிப்பதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 1 டீஸ்பூன் குழம்பு கடலை பருப்பு, 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மேலும் அதில் 50 கிராம் இஞ்சி, 10 சின்ன வெங்காயம், 6 வெள்ளைப் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை & புளி, 6 வரமிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

இப்போது இவற்றில் 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு கடாயில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றிக் கொள்ளவும். இப்பொழுது நமக்கு சுவையான இஞ்சி சட்னி ரெடி.

வெங்காய சட்னி

  • தேவையான பொருட்கள்;
  • பெரிய வெங்காயம் – 2
  • வெள்ளை பூண்டு – 5
  • உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • குழம்பு கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 8
  • புளி சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

ப்ளீஸ் பாக்கியா.., எனக்காக பழனிச்சாமிய கல்யாணம் பண்ணிக்கோ..,கெஞ்சும் ஈஸ்வரி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

செய்முறை விளக்கம்;

வெங்காய சட்னி தயாரிப்பதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதில் குழம்பு கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு, சீரகம் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். மேலும் நறுக்கிய பெரிய வெங்காயத் துண்டுகள் மற்றும் 5 வெள்ளைப் பூண்டு, 8 வரமிளகாய், கறிவேப்பிலை & புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது இவற்றை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இதோடு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து சட்னியில் போட்டு கொள்ளவும். இப்பொழுது நமக்கு சுவையான வெங்காய சட்னி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here