சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்., லாரி உரிமையாளர் சங்க தலைவர் அறிவிப்பு!!!

0
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்., லாரி உரிமையாளர் சங்க தலைவர் அறிவிப்பு!!!
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்., லாரி உரிமையாளர் சங்க தலைவர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் குறிப்பிட்ட வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் 10% முதல் 15% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு சுங்க கட்டணம் பெரிய தலைவலியாக மாறி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் தலைவர் சி.தன்ராஜ் கூறுகையில், “சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்தாலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக டீசல் விலை ரூ.94.24 என மாறாமல் உள்ளது. அதேபோல் வருடத்திற்கு 2 முறை சுங்க கட்டணம் உயர்த்தக்கூடாது என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை இது தொடர்பான தீர்வுகள் கிடைக்கப்படாத நிலையில் மீண்டும் சுங்க கட்டணத்தை உயர்த்தினால் கூடுதலாக ரூ.5,000 முதல் ரூ.6000 வரை செலுத்த வேண்டி வரும்.

நிலநடுக்கத்தால் வெளிவந்த  லியோ படத்தின் சஸ்பென்ஸ்..,கண்டு பிடிச்சுட்டோம்ல!!

எனவே “லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தக்கூடாது” என வருகிற ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.” என கூறியுள்ளார். நாடு முழுவதும் இதுபோன்ற பிரச்சினை தழைத்து வருவதால் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here