டெல்லியில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

0

டெல்லியில் நேற்று விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்யும் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்:

டெல்லியில் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக அரசுடன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. கடந்த 25ம் தேதி வரை அமைதியான முறையில் போய்க்கொண்டிருந்த இந்த போராட்டம் கடந்த குடியரசு தினவிழாவில் போது டிராக்டர் பேரணியில் வன்முறையாக வெடித்தது. இதில் 300கும் மேற்பட்ட போலீசார் காயப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியில் சிங்கு எல்லை பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு பகுதி மக்கள் அங்கு போராடும் விவசாயிகளை அந்த பகுதியை காலி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை ஏற்க விவசாயிகள் மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் போகப்போக கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் கற்கள் மற்றும் கம்புகளை பயன்படுத்தி சண்டையிட்டனர். அதன்பிறகு இவர்களை தடுக்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் அவர்களால் தடுக்க முடியாத நிலையில் லேசான தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை வீசியும் அவர்களை கலைத்தனர்.

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்’ – வாழ்த்து தெரிவித்த ரஹானே!!

தற்போதும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கும் வகையில் சிங்கு, திக்ரித் மற்றும் காசிப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 11 மணி முதல் வரும் 31ம் தேதி இரவு 11 மணி வரை இணைய சேவையை முடக்கியுள்ளனர். 2 நாட்கள் இந்த இணைய சேவை தடை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here