Saturday, April 27, 2024

டெல்லியில் கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் – 22 விவசாயிகள் பரிதாப பலி!!

Must Read

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லி எல்லைகளில் தொடர்ந்து 21-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் குளிர்காற்று அளவு 8.4 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி வரும் நிலையில் தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 22 பேர் குளிரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் விவாயிகள் போராட்டம்:

மத்திய அரசு வெளியிட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லி எல்லைகளில் விவசாய சங்கங்கள் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 21-வது நாளாக தொடரும் போராட்டம் குறித்து மத்திய அரசு விவாசாயிகள் சங்க தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனது.’டெல்லி சலோ’ என்ற பெயரில் நடத்தப்படும் போராட்டம் டெல்லி மாநில எல்லைகளில் தொடர்ந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுக்கு எழுத்துபூர்வ உறுதிமொழி அளித்தது. ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து அதில் எதுவும் குறிப்பிடாததால், விவசாயிகள் மத்திய அரசின் உறுதிமொழியை நிராகரிப்பதாக அறிவித்தனர். தற்போது 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

20 ஆம் தேதி அஞ்சலி:

தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி என பதிவாகி வருகிறது. இந்நிலையில் கடும் குளிரையும் பொறுப்பெடுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதில் பலர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த விவசாயிகளுக்கு வருகிற 20ம் தேதி அஞ்சலி செலுத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி திரைப்பட விழாவில் “ஒத்த செருப்பு” திரைப்படம் – 1 லட்சம் ரொக்க பரிசு வழங்கிய முதல்வர்!!

delhi protest
delhi protest

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி போராட்டம் நடைபெற்று வந்தாலும் ஒரு பக்கம் உற்சாகத்திற்கு குறையில்லாமல் உள்ளது. காலையில் உடற்பயிற்சி, திறந்தவெளி சமையலறையில் அர்ப்பணிப்பு, உணவு விநியோக சேவை, மத உரையாடல்கள், கவியரங்கம், செய்தித்தாள் வாசித்தல், பஜனை பாடல்கள், கீர்த்தனைகள், தீவிர உடற்பயிற்சி, கிரிக்கெட் விளையாட்டு என பல தரப்பட்ட பொழுதுபோக்கு செயல்பாடுகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதால், போராட்டத்தில் மேலும் ஊக்குவிப்புடன் கவனம் செலுத்த முடிவதாக விவசாயிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -