Sunday, May 12, 2024

நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் மரணம் – கவிதை வாயிலாக இரங்கல் தெரிவித்த பாடலாசிரியர்!!

Must Read

தமிழகத்துக்கு பெருமை சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஏ.ஆர். லட்சுமணன்,78 உடல்நல குறைவால் காலமானார்.

பெருமை சேர்த்தவர்:

ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கையில் உள்ள தேவகோட்டையில் 22 மார்ச் மாதம் அன்று பிறந்தார். இவர் இளங்கலை மற்றும் முதுகலை சட்டம் படித்து உள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்று, சிறப்பாக பணியாற்றினார். பின், 2006-2009 நடப்பாண்டில் இந்தியா சட்ட ஆணையத்தின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்தார்.

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

former justice
former justice

இவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியவர். மாசு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டத்தை விதித்தார். இதன் மூலமாக பலரது கவனத்தை பெற்றார். முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் இருந்த நீதிபதி இவர் தான்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். பலரும் இவருக்கு இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

கவிதை வாயிலாக இரங்கல் :

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வாயிலாக அஞ்சலி செலுத்தியுள்ளார். வைரமுத்து தனது கவிதையில் அவருடன் இருந்த நினைவுகளை கூர்ந்துள்ளார். வைரமுத்துவின் புத்தகமான “கருவாச்சி காவியம்” பதிப்பின் முதல் பிரதியை பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தின் நெடுந்தூண் என்றும் புகழ்ந்துள்ளார்.

அதே போல் அரசியல் பிரமுகரான பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னாருக்கு இரங்கல் செலுத்தி உள்ளார்.

ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -