புட்ட பொம்மா, புட்ட பொம்மா..! ஒரே டான்சில் வைரலான வார்னரும் அவரது மனைவியும்..!

0

உலகம் முழுவதும் கொரோனவால் மக்கள் அனைவரும் வீட்டினுள் முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில் தனது ரசிகர்களை குஷிப்படுத்த சினிமா நட்சத்திரங்கள் டிக்டாக் மூலமும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வீடியோ மற்றும் போடோஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது டிக்டாக்-கில் இணைந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

புட்ட பொம்மா, புட்ட பொம்மா..!

இந்த வருடம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளும் கொரோனா காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தற்போது டிக்டாக்கில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு தனது மனைவியுடன் நடனமாடிய விடீயோ தீயாக பரவி வருகிறது. தனது 5 வயது மகளுக்காக டிக்டாக் செயலியில் இணைந்த வார்னர் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இவரை அதிகளவில் இந்திய ரசிகர்கள் பின்தொடர்வதை அறிந்த உடன் பாலிவுட் பாடல்களுக்கு டிக்டாக்கில் நடனமாட தொடங்கி விட்டார். இணைந்த சில நாட்களிலேயே 10 லட்சம் பேர் இவரை பின்தொடர ஆரம்பித்து விட்டனர். இவர் தற்போது வெளியிட்ட புட்ட பொம்மா புட்ட பொம்மா பாடல் நடன வீடியோ மற்றும் 2 கோடி பார்வைகளையும் தாண்டி வைரலாக பரவி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here