“என் பிள்ளை..எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை” – பிக் பாஸ் பிரபலம் மகளுடன் ஆடும் வீடியோ!!!

0

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் சாண்டி; இவருக்கு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது சாண்டி மகளுடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

என் பிள்ளை..எட்டு வைத்த நடையை போல:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாண்டி மாஸ்டர்; தற்போது கோலிவுட்டில் பிசியாக இருக்கிறார். பெரிய ஸ்டார்களுடன் வேலை செய்து வரும் சாண்டி மாஸ்டருக்கு தன் மகள் லாலா என்றால் உயிர். அவர் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தபோது அங்கு வந்த லாலா; சக போட்டியாளர்களை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் கவர்ந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து; டான்ஸ் மாஸ்டராக சில படங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சமமாக லாலா குட்டி பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் லாலாவின் 3வது பிறந்தநாளை கடந்த 25ம் தேதி கொண்டாடினார்கள்.

தற்போது; கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் சாண்டி குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில்; தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் லாலா குட்டியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை அப்லோட் செய்துள்ளார். அதில் “Dance fun time with my daughter” என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SANDY (@iamsandy_off)

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here