தளபதி விஜயின் பிறந்தநாள் ‘காமன் டிபி’ மாஸ் அப்டேட் – இணையத்தை கலக்கிய வீடியோ!!

0

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நாயகனான தளபதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி தற்போது காமன் டிபி எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற செய்தியை இன்று அறிமுகப்படுத்தவுள்ளனர்.

தளபதி விஜய்

தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தான் விஜய். பல கஷ்டங்களை தாண்டி தனது உழைப்பால் மட்டுமே முன்னேறியுள்ளார். தமிழ் மக்கள் கொண்டாடும் தலைவனாக இருக்கிறார் என்றே சொல்லலாம். மேலும் தற்போதெல்லாம் தொடர்ந்து பல ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார்.

முன்னணி இயக்குனர்களுக்கு மட்டும் வாய்ப்பு தராமல் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார். அதன் பிரதிபலிப்பு தான் பல மாஸ் ஹிட் படங்கள். மேலும் இவர் அரசியலுக்கு வர இருப்பதாகவும் பல வதந்திகள் பரவ தான் செய்தது.

இதனால் அவரது அப்பாவுக்கும் இவருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் நடிக்கும் 66 வது படத்திக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் அவரது பிறந்த நாள் ஜூன் 22 இல் வரவுள்ள நிலையில் எப்பொழுதும் அவரது ரசிகர்கள் காமன் டிபி உருவாக்கி அதனை வைரலாக்குவார்கள். அதன் படி இந்த பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் காமன் டிபியை எடிட் செய்து வருகின்றனர். மேலும் இந்த காமன் டிபி எப்பொழுது வெளியிடப்படும் என்ற தகவலும் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கவுள்ளனர். அறிவிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 19 அன்று மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here