கறி தோசை சாப்பிட்டு இருப்பீங்க.., கறி இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா.., ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!!

0
கறி தோசை சாப்பிட்டு இருப்பீங்க.., கறி இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா.., ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!!
கறி தோசை சாப்பிட்டு இருப்பீங்க.., கறி இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா.., ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!!

இட்லி, தோசைக்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவதை விட கறி குழம்பு வைத்து சாப்பிடுவதே தனி சுவைத்தான். மேலும் புது முயற்சியாக, “கறி இட்லியை” வீட்டில் ஈசியாக சமைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இட்லி மாவு- தேவையான அளவு
 • சிக்கன் – 1/2 கிலோ
 • எண்ணெய் – தேவையான அளவு
 • சோம்பு – 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • வெங்காயம் – 2
 • தக்காளி – 1
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
 • மல்லித்தூள் – 2 ஸ்பூன்
 • மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
 • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
 • கொத்தமல்லி – சிறிதளவு
 • தண்ணீர்- தேவையான அளவு

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை:

முதலில் கறி இட்லிக்கு சிக்கன் கிரேவி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு , கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். இதை தொடர்ந்து வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கிய பின், மஞ்சள் தூள், உப்பு, சுத்தம் செய்த சிக்கன் சேர்த்து கிளறி விட வேண்டும். 1 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லி தூள், மிளகுத்தூள் சேர்த்து மசாலா ஓட்டும் வரை கிளறி விட்டு தேவையான தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது மூடியை திறந்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சிக்கன் கிரேவி தாயார்.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., இனி டிக்கெட்டுகாக நீங்கள் அலைய வேணாம்! வெளியான அப்டேட்!!

இதையடுத்து ஒரு இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி சூடான பின், ஒரு அடுக்கு இட்லி தட்டில் சிறிது மாவு ஊற்றி அதன் மேல் சிக்கன் கிரேவி வைத்து, அதன் மேல் கொஞ்சம் இட்லி மாவு ஊற்றி 10 நிமிடம் வேக வைத்தால் “கறி இட்லி” ரெடி ஆகிவிடும். இப்போது இறக்கி சுவையான இட்லியை, பரிமாறினால் மிச்சமே இல்லாமல் காலியாகி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here