ஐபிஎல் 2020: ஹைதெராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

0

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மூன்று முறை சாம்பியன் மற்றும் கடைசி சீசனில் ரன்னர்-அப் ஆன எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேவிட் வார்னரின் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. இத்தொடரில் அக்டோபர் 1 இவ்விரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் ஹைதெராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தியது. அதே உற்சாகத்தில் SRH களமிறங்குவதால் சென்னை அணிக்கு சற்று சிக்கல் தான்.

சென்னை vs ஹைதெராபாத்:

இத்தொடரில் ஏழு போட்டிகளில் மூன்று போட்டிகளில் ஹைதெராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. சென்னை அணி தற்போது மீதமுள்ள எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை பெற முடியும். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான சேஸர்களில் ஒரு அணியாக கருதப்படும், சிஎஸ்கே அணியில் இம்முறை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவதே தோல்விக்கு காரணமாக உளள்து.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி பவுலிங் பிரிவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஜானி பேர்ஸ்டோவ், கேப்டன் டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் நீண்ட நாட்கள் 7வது இடத்தில் நீடிப்பது இதுவே முதல் முறையாகும். ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆகிய பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது அணிக்கு பலவீனமாக உள்ளது.

ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, கேப்டன் தோனி ஆகியோரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். கடந்த போட்டியில் கேதார் ஜாதவிற்கு பதிலாக களமிறங்கிய தமிழக வீரர் ஜெகதீசன் இப்போட்டியில் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உத்தேச 11 அணி:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (c), ஜானி பேர்ஸ்டோவ் (wk), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ரஷீத் கான். சந்தீப் சர்மா, டி நடராஜன், கலீல் அகமது

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், என் ஜெகதீசன், ஃபாஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, சாம் கர்ரன், எம்.எஸ். தோனி (c&wk), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், கர்ன் சர்மா, சாதுல் தாக்கூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here