கொத்து கொத்தா முடி கொட்டுதா?? இந்த அரோமாதெரபி ட்ரை பண்ணி பாருங்க!!

0
aromatherapy
aromatherapy

இந்த நவீன உலகத்தில் பரபரப்பான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் நமது உடல் நலனை கூட நம்மால் சரியாக பராமரிக்க முடியவில்லை. இதில் முக்கியமான பிரச்சனை முடி உதிர்வது தான். இதனை ஆரம்பத்திலேயே பராமரிக்காமல் விட்டு விடுவதால் வழுக்கை விழும் அளவிற்கு பெரிய பிரச்சனை ஆகிறது.

முடி உதிர்வு:

முடி உதிர்வு பிரச்சனைக்கு நாம் பல கெமிக்கல் பொருட்களை உபயோகித்து இருப்போம். ஆனால் அது நிரந்தர தீர்வு ஆகாது. இதனால் மேலும் முடி உதிர்வுக்கு தான் வழிவகுக்கும். முடியின் வேரில் வலிமை இல்லாத போது முடி கொட்டுதல் பிரச்சனை அதிகரிக்கிறது. மேலும் நமது உணவு பழக்கங்களும் ஒரு முக்கிய காரணம். துரித உணவுகளை விட்டு விட்டு சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

hair fall
hair fall

முடிகளில் வறட்சி தன்மை ஏற்பட்டாலும் உதிர்வு ஏற்படும். மேலும் தலை முடிகளில் அழுக்கு தூசி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். மேலும் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை முடி உதிர்வுக்கு அதிகம் வழிவகுக்கும். மேலும் குளிர் காலம் மற்றும் கோடை காலத்தில் கூட முடி உதிர்வு ஏற்படும். இந்த முடி கொட்டுதல் பிரச்சனையில் இருந்து விரைவான தீர்வு கிடைக்க அரோமாதெரபி மூலம் வழிகள் உள்ளன.

hair fall
hair fall

அதாவது தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவற்றை சரி சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரவில் தூங்கும்போது 2 ஸ்பூன் எடுத்து தலைக்கு மசாஜ் செய்து விட்டு தூங்க வேண்டும். காலையில் எழுந்ததும் ஷாம்பூ போட்டு குளித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை முழுமையாக நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here