பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போகும் அணி எது?? இன்று சென்னை – ராஜஸ்தான் மோதல்!!

0

ஐபிஎல் 2020 தொடரின் 37 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்பதால் தீவிர பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். அபுதாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

சென்னை vs ராஜஸ்தான்:

ஐபிஎல் தரவரிசைப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7வது இடத்திலும் உள்ளது. சிஎஸ்கே.,வின் ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் அதிரடி காட்டினார். இருப்பினும், கேப்டன் எம்.எஸ்.தோனியின் மோசமான பார்ம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதுவரை 169 போட்டிகளில் 3,994 ரன்களுடன், கேப்டன்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டாப்பில் உள்ள தோனி இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். மறுபுறம் கடைசி போட்டியில் ஏற்பட்ட காயத்தால் ட்வைன் பிராவோ அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பது சிரமம். இதனால் டெத் ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக கவனத்தை செலுத்த வேண்டி இருக்கும். மேலும் கேதார் ஜாதவுக்கு பதிலாக ஜெகதீசன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறும் ரசிகர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசி பார்மிற்கு திரும்பி உள்ளார். ஆனால் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தாமதமாக அணியில் சேர்ந்த பிறகு இன்னும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்திற்கு திரும்பாமல் உள்ளார்.

ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆரம்ப போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடினர். அதே நேரத்தில் ராபின் உத்தப்பா டெத் ஓவர்களில் அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது வேக பந்துவீச்சால் சென்னை அணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆல் ரவுண்டர் ராகுல் தேவதியா அணிக்காக தனி ஒருவனாக போராடி வெற்றி பெற்றுத் தந்துள்ளார். அவரது அதிரடி இந்த போட்டியிலும் தொடரலாம்.

உத்தேச 11 அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஃபஃப் டு பிளெசிஸ், எம்.எஸ்.தோனி (c & wk), சாம் கரன், கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, ஷார்துல் தாகூர், தீபக் சஹார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர் (wk), யஷஸ்வி ஜெய்ஸ்வால் / ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் (c), ரியான் பராக், மஹிபால் லோமர், டாம் கரன், ராகுல் தேவதியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட் / வருண் ஆரோன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here