சுவையான ‘சிக்கன் ரோஸ்ட்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
chicken roast
chicken roast

சிக்கனில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. சிக்கனை நாம் சமைக்கும் முறை பொறுத்தே அதன் நன்மை, தீமை அமைந்துள்ளது. சிக்கனில் அதிகம் புரத சத்துக்கள் உள்ளதால் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கண்புரை பிரச்சனைகளையும் குணமாக்குகிறது. இப்பொழுது இந்த சிக்கனை வைத்து சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

chicken
chicken

சிக்கன் – 1/2 கி

வெங்காயம் – 1/4 கி

இஞ்சிபூண்டு விழுது – சிறிது

பச்சை மிளகாய் – 3

மஞ்சள்தூள்

மிளகுத்தூள்

மல்லித்தூள்

மிளகாய்த்தூள்

கரம் மசாலா

காய்ந்த மிளகாய்

தக்காளி சாஸ்

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பௌலில் சிக்கனை எடுத்து மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் வெங்காயம் சீக்கிரம் வதங்கும்.

chicken roast
chicken roast

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு வதக்கவும். இப்பொழுது சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பச்சை வாடை போகும்வரை நன்கு வதங்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து கிளறவும்.

chicken roast
chicken roast

மசாலா சிக்கனுடன் நன்கு கலந்ததும் மூடி வைக்கவும். இப்பொழுது 10 நிமிடங்களுக்கு பிறகு திறந்து அதில் தக்காளி சாஸை சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் ரோஸ்ட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here