சுவையான ‘Crunchy Mushroom’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
mushroom cruncy
mushroom cruncy

இன்றைய காலகட்டத்தில் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ பிரியராகவே இருக்கின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிக அளவு அசைவத்தை எடுப்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நோய் தொற்றும் விரைவாக ஏற்படுகிறது. அதனால் சைவத்தில் இந்த மாதிரி செய்து கொடுங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது காளானை வைத்து புதுவிதமான ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

காளான் – 500 கி

மைதா மாவு – 2 தேக்கரண்டி

சோளமாவு – 2 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

வரமிளகாய் – 3

பிரட் துகள்

முட்டை

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் காளானை நீளமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு பௌலில் மைதா மாவு மற்றும் சோளமாவை சேர்த்து கலந்துகொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இடித்த வைத்த வரமிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

mushroom cruncy
mushroom cruncy

சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் வேறொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து கொள்ளவும். பிறகு ஒரு சிறிய தட்டில் பிரட் துகளை போட்டு வைத்துக்கொள்ளவும்.

mushroom cruncymushroom crmushroom cruncyuncy
mushroom cruncy

இப்பொழுது வெட்டி வைத்த காளானை அந்த மாவில் முக்கி பிரட் துகளில் பிரட்டி அதன் பின் முட்டையில் முக்கி திரும்பவும் பிரட் துகளில் பிரட்டி சூடான எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான Crunchy Mushroom தயார். இதற்கு சாஸ் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here